ஓட்டப்பிடாரத்தில்தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு மாநாடு

ஓட்டப்பிடாரத்தில் தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு மாநாடு நடந்தது.
ஓட்டப்பிடாரத்தில்தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு மாநாடு
Published on

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் தேவேந்திர குல வேளாளர் வாக்காளர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பு தலைவர்கள் இந்திரன் ஜெயக்குமார், கோவில்பட்டி பரமசிவன் ஆகியோர் தலைமை தாங்கினார். அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கம் பேரவைத் தலைவர் முருகன் முன்னிலை வைத்தார். மாநாட்டின் போது வீரன் சுந்தரலிங்கனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் உருவப்படம் திறக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநாட்டில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் மாணவ, மாணவிகளை மனச்சோர்வு அடையும் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவேந்திர குல வேளாளர் சாதியினரை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி முற்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com