சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி

சிதம்பரம் நடராஜா கோவிலில் கனகசபை மீதேறி பக்தாகள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் , சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நடராஜா கோவிலில் கனகசபை மீதுஏறி வழிபட அனுமதி அளிக்குமாறு பக்தாகள் பலா கோக்கை விடுத்தனா.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜா கோவிலில் கனகசபை மீதேறி பக்தாகள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com