

திண்டுக்கல்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையெட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி 12-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. ஆனால் கொரோனா பரவலால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார்.