சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.22¼ லட்சம் உண்டியல் காணிக்கை

சென்னிமலை முருகன் கோவிலில்பக்தர்கள் ரூ.22¼ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா.
சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.22¼ லட்சம் உண்டியல் காணிக்கை
Published on

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மு.ரமணி காந்தன் தலைமையில் தக்கார் பிரதிநிதி அ.குகன், கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார் பெருந்துறை சரக ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் நிரந்தர உண்டியலில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 546 ரூபாயும், 34 கிராம் தங்கம் மற்றும் 1,953 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. அதேபோல் திருப்பணி உண்டியலில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 627 ரூபாய் காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.22 லட்சத்து 33 ஆயிரத்து 173 பக்தர்களின் காணிக்கை செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் நந்தா கல்லூரி, மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com