ராமேஸ்வரம் அக்னி தீர்த்ததில் கலக்கும் கழிவு நீர் - பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர்கள் வேறு வழியின்றி கழிவுநீர் கலந்த தீர்த்தத்தில் நீராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்ததில் கலக்கும் கழிவு நீர் - பக்தர்கள் அதிர்ச்சி
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், அக்னி தீர்த்த கடற்கரை அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் நேரடியாகக் கடலில் கலந்து வருவது புனித நீராட வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் வேறு வழியின்றி கழிவுநீர் கலந்த தீர்த்தத்தில் நீராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கழிவுநீர் கடலில் கலந்து வருவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com