அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம் வழியில் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com