ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்
Published on

ராமேசுவரம்,

ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.

ஆவணி மாத அமாவாசை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதுபோல் மாதம் தோறும் வரும் சர்வ அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் குவிவார்கள். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அக்னி தீர்த்த கடலில் நீராடி, பூஜை செய்து வழிபடுபடுவதற்கு இது போன்ற அமாவாசை நாட்கள் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து குவிந்தனர்.

கோவிலில் தரிசனம்

கடலில் நீராடி, பின்னர் கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களை வேண்டி திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

அதை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடிவிட்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர். இதேபோல் தேவிபட்டினம் நவபாஷாண கடல் மற்றும் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடல் பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com