முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
Published on

ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து முத்துமாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை, மாலை இருவேளையும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி, வேல் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com