பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம்

கழுகுமலை பாண்டி முனீஸ்வரர் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம்
Published on

கோவில் கொடைவிழா

கழுகுமலை பாண்டி முனீஸ்வரர், சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த ஜூன்.23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக, ஆராதனை நடந்தது. 28-ந்தேதி பாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆதிபராசக்தி கும்மி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

கிரிவலம்

நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அக்கினி சட்டி எடுத்து ஊர் விளையாடல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பாட்டு கச்சேரி நடக்கிறது. வரும் ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com