திருவண்ணாமலையில் வார விடுமுறையையொட்டி அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் வார விடுமுறையையொட்டி அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கோவிலில் பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com