விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on: 

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பொதுவழியில் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககி ரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாஸ்டர் பிளான் திட்டத்தில் திருத்தணி முருகன் கோவில் மாடவீதி விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதன் காரணமாக கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே செல்லாதவாறு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் மாற்றுத்திறனாளிகள் மேற்கு கோபுரம் அருகில் சாய்தள மரப்பலகை வழியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் சாய்தள மரப்பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே கோவில் நிர்வாகம் விரைந்து சாய்தள மரப்பலகையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com