திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்துசாமிதரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
Published on

திருச்செந்தூர்:

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது.

பக்தர்கள் குவிந்தனர்

சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று கார், வேன்கள், பஸ்கள், ரெயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலில் குவிந்தனர்.

கடலில் புனித நீராடிய அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் நேற்று திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள் ரதவீதி, தெப்பக்குளம் அருகிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com