திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

சாமி தரிசனம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பக்தர்கள் காத்திருப்பு

இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com