வைகாசி பிறப்பையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

வைகாசி மாதப்பிறப்பு மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
வைகாசி பிறப்பையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம். வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

அந்த வகையில், வைகாசி மாதப்பிறப்பு மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இரவில் கடற்கரை மற்றும் கோவில் வளாகங்களில் தங்கிய பக்தர்கள், அதிகாலை முதலே கடலில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபா ராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. இலவச தரிசனத்தில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் 7 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com