

பாவூர்சத்திரம்:
தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மலையைச் சுற்றிலும் பக்தர்கள் கிரிவலம் நடைபெறும். அதேபோல் கிரிவலம் நடந்தது. இதையெட்டி கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவல்லப விநாயகர் கேவில் முன்பு பூஜை செய்து வழிபட்டு, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடிந்தவுடன் கோவிலில் சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கோவிலில் தமிழ் மாதத்தின் அனைத்து பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் நடைபெறுவது இதன் சிறப்பாகும்.