ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

சிறப்பாக பணியாற்றிய 20 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணியை பாராட்டி வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு
டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்
Published on: 

சென்னை,

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஆய்வு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ்குமார் அகர்வால், இன்று ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்ற நிலைமை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையாளர், இணை ஆணையாளர், துணை ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நடவடிக்கைகள்

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் சட்ட ஒழுங்கு குறித்தும் கொலை உட்பட அனைத்து குற்ற வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் கஞ்சா. குட்கா போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள், சாலை விபத்துகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், இணையவழி குற்றங்கள்.

மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்தல் மற்றும் நிதி சார்பு புலன் விசாரணை தொடர்பாகவும் அறிவுரை வழங்கினார். சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது. அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை.

முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளின் நீதிமன்ற பிணைகளை ரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பிடியாணைகளை நிறைவேற்றுதல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நடை ரோந்து குறித்தும் மற்றும் கிராம விழிப்புணர்வு குழு ஏற்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய 20 காவல் அதிகாரிகள்   பணியை பாராட்டி வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
மகேஷ்குமார் அகர்வால்

சான்றிதழ்கள்

மேலும், காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகாக அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணியாற்றிய 20 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணியை பாராட்டி வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com