சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்

62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையால் எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கைகள் என்ன? - டி.ஜி.பி அலுவலகம் விளக்கம்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள்பற்றி டி.ஜி.பி அலுவலகம் விளக்கம். இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், தெரிவித்திருப்பதாவது:-

நடவடிக்கை

தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

308 புகார்கள்

கடந்த ஒரு வாரகாலத்தில் 31.07.2026 முதல் 06.08.2026 வரை. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 308 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 16 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,402 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 11,560 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

போக்சோ சட்டம்

இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 6 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 2 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவுகள் சென்னை, தாம்பரம். தர்மபுரி, திருநெல்வேலி. சிவகங்கை, மதுரை. பெரம்பலூர். திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருப்பூர். மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாக செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம்.

சம்பந்தப்பட்ட நபர்கள் கைது

தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் , பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

பாதுகாப்பான மாநிலம்

இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com