ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து போலீசாரிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
Published on

சென்னை ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு செய்தார். யாரும் எதிர்பாராத நிலையில் போலீஸ் நிலையத்துக்குள் சென்ற அவர், அங்கிருந்த பணி பதிவேடு, பொது நாட்குறிப்பு, சி.எஸ்.ஆர்., முதல் தகவல் அறிக்கை பதிவேடுகள் மற்றும் பாரா புத்தகங்களை ஆய்வு செய்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசாரிடம் நலம் விசாரித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். புத்தகங்கள் அனைத்தையும் சரியாக பராமரித்த போலீஸ் நிலைய எழுத்தரான போலீஸ் ஏட்டு ராஜகுருவையாவை பாராட்டி, பரிசாக ரொக்கம் வழங்கினார்.

பொதுமக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு அவர்களின் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

டி.ஜி.பி.யின் திடீர் வருகையால் பதற்றம் அடைந்த போலீசார், அவர் இயல்பாக பேசுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடன் போலீசார் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com