போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறகூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறகூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு.
போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம்பெறகூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு
Published on

சென்னை,

டி.ஜி.பி.சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

சில போலீஸ் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலைய பெயர் பலகைகளை அகற்றி, போலீஸ் நிலைய பெயர் மட்டுமே உள்ள புதிய பெயர் பலகையை அமைத்திட அறிவுறுத்தப்படுகிறது. போலீஸ் நிலைய முன்பணத்தை இதற்காக செலவிடலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com