"சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள்" - டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
"சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள்" - டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை புத்தக நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறும்போது, "சமூக வலைதலங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை மக்கள் உண்மை என நம்பி ஏமாறுகின்றனர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பலரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர். இதனால் உண்மையை உணராத மக்கள் ஏமாற்றமடைகின்றனர். நாம் கேட்கக்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக்கூடிய பார்வைகளில் எது உண்மை என்று அறியும் ஆற்றல் வேண்டுமெனில், நிறைய நூல்களை படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியும்.

குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், சமூக வலைதலங்களில் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். அவர்களை காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு டிஜிபி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com