விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது: அமைச்சர் மரியவில்சன்

யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களது விருப்பம் என்று மரியவில்சன் கூறினார்.
விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது: அமைச்சர் மரியவில்சன்
Published on: 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக தனுஷ் மாற்றியுள்ள நிலையில், அரசியல் களத்தில் குதிக்கவும் ஆயத்தமாகி வருகிறார்கள். கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மரியவில்சன் கூறியதாவது: தனுஷ் அரசியலுக்கு வரட்டும். விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது. முதலைமச்சர் ஒரே ஒருவர் மட்டும் தான். மக்கள் 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களது விருப்பம்.

தனுஷ் மட்டுமல்ல; திமுக, அதிமுக-வே விஜய்க்குப் போட்டியில்லை. தனுஷ் எனக்கு நெருக்கமானவர்தான். அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வரும் நாள்களில்தான் அவர் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று தெரியும்.ஏற்கெனவே திராவிடக் கட்சிகள் போட்ட கணக்குகள் தோல்வி அடைந்துவிட்டன. தற்போது தனுஷ் வருவது திருப்புமுனையாக இருக்கும் என்று இரண்டு கட்சிகளும் நினைக்கின்றன.ஆனால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்” என்றார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com