மகளிர் அணி நிகழ்ச்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ்

தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுடனான சந்திப்பில், நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார்.
5 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ்
Published on: 

சென்னை,

சென்னையில் தனது ரசிகர் மன்ற மகளிரணியை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிருக்கு, வெள்ளி விளக்குகளை பரிசளித்தார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கோவை கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் ரசிகர் மன்றங்கள் தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில், சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், மாவட்ட நிர்வாகிகளை தனுஷ் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமான பெண்கள் தனியார் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

முன்னதாக மகளிரணி சந்திப்புக்கு வந்தவர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, பிரட் அல்வா என அசத்தல் விருந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக அளித்தார்.

நிகழ்ச்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ், “உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி; தீபாவளி வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுடனான சந்திப்பில், நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில்,

"எங்களை நன்றாகப் படிக்கும்படி அறிவுறுத்தினார். அவரைச் சந்தித்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்காக ஒரு பாடலும் பாடினார். அத்துடன், ‘வீட்டிற்குப் பத்திரமாகச் செல்லுங்கள்' என்றும் கூறினார்.

"2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்"

தனுஷ் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். "பார்த்து பத்திரமாக வீட்டுக்குப் போங்கள்” என்று கூறினார். அதன் பிறகு வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சந்திப்புக்கு வந்தவர்களுக்கு சிறிய வெள்ளி விளக்கையும் பரிசாக வழங்கினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com