தர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

தர்மபுரி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட ஏ.கொல்லஅள்ளி சாலை வேடியப்பன் திட்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள், சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் சாக்கடை கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கிருபாகரன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், கவுன்சிலர் தனலட்சுமி சுரேஷ் மற்றும் போலீசார் மேற்பார்வையில் வேடியப்பன் திட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபால் சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com