தருமபுரி: சவுமியா அன்புமணிக்காக மகள்கள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி, தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தருமபுரி: சவுமியா அன்புமணிக்காக மகள்கள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
Published on

தருமபுரி,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறங்கியுள்ள தங்களது தாயார் சவுமியா அன்புமணிக்காக, மகள்கள் சங்கமித்ரா, சம்யுத்ரா இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி தொகுதியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அடங்கிய நோட்டீஸை இருவரும் வீடு வீடாக சென்று வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com