தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்


தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  நீக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2025 10:35 AM IST (Updated: 23 Feb 2025 11:13 AM IST)
t-max-icont-min-icon

தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி,

தி.மு.க.,வில் கடந்த சில நாட்களாக, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு பொறுப்பாளர்களை நியமிப்பது போன்ற பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பிறப்பித்துள்ளார். அதே சமயம் தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story