

தர்மபுரி,
தர்மபுரியில் மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சுகாதாரத்ததுறை நடத்திய விசாரணையில் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த நர்ஸ் பரிமளா, புரோக்கர் வடிவேலு ஆகியோர் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிய உதவி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் பரிமளா மற்றும் வடிவேலு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஸ்கேன் செய்யும் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.