தருமபுரி: கஞ்சா போதையில் தாயை கொன்ற மகன் கைது

தலைக்கேறிய கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி: கஞ்சா போதையில் தாயை கொன்ற மகன் கைது
Published on: 

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில், கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக 19 வயது மகனை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்து வரும் தேவராஜ், இன்று காலை வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை சரமாரியாகக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் 42 வயதான சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த இண்டூர் போலீசார், தேவராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் காவலரின் தொப்பியை அணிந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், இன்று தலைக்கேறிய கஞ்சா போதையில் பெற்ற தாயைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X