

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 16.02.2026 முதல் 26.05.2026 வரை 100 நாட்களுக்கு முறை வைத்து அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும் அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅளள், சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்திலுள்ள 1993 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.