மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின் தடை ஏற்பட்டது ஏன்? மின்வாரியம் விளக்கம்

மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் மின் தடை
Published on: 

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடை நீடிப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் முன்வக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது ஏற்பட்ட மின் தடையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் தடை குறித்து மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் 350 கே வி ஏ (KVA) மின் பளு கொண்ட உயர் அழுத்த மின் இணைப்பு (HT SC) உள்ளது. மேலும் அவசர காலங்களுக்காக இரண்டு 125 கே வி ஏ (KVA) திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் உள்ளன. நாளை(இன்று) மிக முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு மதுரை மின்சார ஆய்வாளர் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, கோவில் மின்சாரப் பிரிவு மூலம் சில பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, கோவில் மின்சாரப் பிரிவு, மாலை 4.20 மணிக்கு மின் வழங்கலை ஜெனரேட்டர் மின் இணைப்பிற்கு மாற்றியது. பணிகள் நிறைவடைந்த பின், மாலை 5.35 மணிக்கு மின் மின்வாரிய தொகுப்பிற்கு இணைப்பு மாற்றப்பட்டது. இதற்கு 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X