அதிமுகவில் இணையவரவில்லை; வாழ்த்து தெரிவிக்க வந்தேன் - புகழேந்தி

அதிமுகவில் இணையவரவில்லை, வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்று அமமுகவின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணையவரவில்லை; வாழ்த்து தெரிவிக்க வந்தேன் - புகழேந்தி
Published on

சேலம்,

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு அமமுக புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சேலத்தில் எனது மாமியார் வீடு உள்ளது. இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவிக்க வந்தேன். இப்போது அதிமுகவில் சேரப்போவது இல்லை.

ஆட்சி, கட்சி எந்த வித ஆபத்தும் இல்லாமல் அதிமுக வீறு நடைபோடுகிறது. அதிமுகவில் சேருவது என்றால் உங்களுக்கு தகவல் தெரிவிப்பேன். நான் தற்போது அமமுகவில் தான் உள்ளேன். முதல்வரும் நானும் 35 ஆண்டுகால நண்பர்கள், தினகரனால் அனைத்தையும் இழந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com