சட்டம் ஒழுங்கு கைமீறிவிட்டதைத்தான் முதலமைச்சர் கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…? அன்புமணி கேள்வி

காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்ததை ’ஓவர்’ என கையசைத்ததாக முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
சட்டம் ஒழுங்கு கைமீறிவிட்டதைத்தான் முதலமைச்சர் கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…? அன்புமணி கேள்வி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு வந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜான் என்ற மாற்றுத்திறனாளியையும், வட இந்தியத் தொழிலாளியையும் அரிவாளால் வெட்டி கொன்ற அக்கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரிடம் கடந்த 3-ம் தேதி டாஸ்மாக் கடைக்கு சென்ற ஒரு கும்பல் தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டியது.

தப்பியோடிய அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், வழியில் தென் பட்ட ஆண், பெண்களை அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் ராஜூ தவிர, தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கோவை, சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரை பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்று உடன் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றதால் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து அவருடன் மேலும் 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

முதலைமைச்சர் காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்ததை ’ஓவர்’ என கையசைத்ததாக அவர் விளக்கம் அளித்தாலும், அதை வைத்து ‘ஆல் பினிஷ்’ என நான் சொன்னது போல வைரலாக்கிவிட்டனர் என்றார். இந்த மூன்று நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதால், ‘ ஆல் பினிஷ்’ என சட்டம் ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்றுதான் எண்ணி வைரலாக்கப்பட்டதோ என்றே எண்ணவைக்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com