விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை பொறுப்பு கொடுத்தாரா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

மக்களுக்கு நியாயமான முறையில் என்ன கிடைக்க வேண்டுமோ அதை சரியான முறையில் பெற்று தருவேன் என்று ரமேஷ் கூறினார்.
விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை பொறுப்பு  கொடுத்தாரா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Published on

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்திருப்பது சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியது. இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: -

எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி. அதுதான் எங்கள் கொள்கையாக எங்களது தலைவர் முன்னிறுத்தினார். அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு சாதிய வேற்றுமை தவிர்த்து தந்தை பெரியார், சட்டமேதை அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.சாதியோ, பணமோ, இனமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

எங்கள் தலைவருக்கு(விஜய்) இதுபோன்ற பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணமும் கிடையாது. இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அல்ல, கீழ்மட்ட ஊழியர்கள் வரை எந்தவித ஊழலிலும் ஈடுபடவோ, அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இடம் கிடையாது. அனைத்து கோயில்களும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்.மக்களுக்கு நியாயமான முறையில் என்ன கிடைக்க வேண்டுமோ அதை சரியான முறையில் பெற்று தருவேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com