வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

மத்திகிரி:

ஓசூர் தாலுகா நாகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 28). இவர் கடந்த 8-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் ஆனேக்கல்- பூனப்பள்ளி சாலையில் பூனப்பள்ளி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com