ஊத்தங்கரை அருகே, கிணறு வெட்டியபோது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி

ஊத்தங்கரை அருகே, கிணறு வெட்டியபோது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா வெங்கடதாம்பட்டி அருகே உள்ள கொல்லநாயக்கனூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). தொழிலளாளி. இவர் நேற்று முன்தினம் வசந்தபுரம் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் தலையில் கல் ஒன்று விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com