அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன மேலாளர் பலி

அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன மேலாளர் பலி
Published on

ராயக்கோட்டை:

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 30). இவர் உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருடைய மனைவி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி தன்னை பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த ஆகாஷ் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்தார். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com