நல்லம்பள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

நல்லம்பள்ளி அருகேகிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

நல்லம்பள்ளி அருகே உள்ள உம்மியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). தொழிலாளி. இவர் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்க்க உம்மியம்பட்டியில் உள்ள சக்கரபாணி என்பவருடைய விவசாய கிணறு அருகே நடந்து சென்றார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் ஒன்றிணைந்து பெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை

இதையடுத்து 2 மணி நேர தேடலுக்கு பின்னர் பெருமாளை இறந்த நிலையில் உடலை மீட்டனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com