ஜேடர்பாளையம் அருகே, மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ஜேடர்பாளையம் அருகே, மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
ஜேடர்பாளையம் அருகே, மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பாபு (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி சின்னமருதூரில் உள்ள ஒரு பாலத்தில் மது குடித்து விட்டு அமர்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாபு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com