வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து‌ மூதாட்டி சாவு

வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து‌ மூதாட்டி சாவு
வேலகவுண்டம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து‌ மூதாட்டி சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி கணக்கம்பாளையம் கிழக்கு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். விவசாயி. இவருடைய மனைவி பாப்பாயி (வயது 90). இவர் நேற்று காலை அவரது தோட்டத்தில் உள்ள கிணறு அருகே சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பாப்பாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com