கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா அனுமந்தீர்த்தம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்தி அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகில் நடந்து சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து படுகாயம் அடைந்துஇறந்தார்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com