மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
Published on

ஓசூர்:

ஓசூர் அருகே திருச்சிப்பள்ளத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக ஓசூர் கொத்தூரை சேர்ந்த சக்திவேல் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மூர்த்தி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். சக்திவேல் காயம் அடைந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com