எருமப்பட்டியில் விஷ மாத்திரை தின்று டிரைவர் தற்கொலை

எருமப்பட்டியில் விஷ மாத்திரை தின்று டிரைவர் தற்கொலை
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டியில் விஷ மாத்திரை தின்று டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

டிரைவர்

எருமப்பட்டி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் கணேசன் (வயது 31). இவருக்கு சுதா (30) என்ற மனைவி உள்ளார். கணேசன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கணேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு வெளியில் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மனைவி சுதா வெளியில் சென்றார்.

விசாரணை

அப்போது கணேசன் அங்குள்ள வயல்வெளியில் படுத்து கிடந்ததை பார்த்தார். பின்னர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தான் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதா கணவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com