சேந்தமங்கலத்தில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்

சேந்தமங்கலத்தில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் அரசு பஸ் மோதி கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலியானார்.

வாலிபர்

ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால் ரவிச்செல்வன். இவருடைய மகன் கிஷோர் (வயது 22). கல்லூரி படிப்பை முடித்துள்ள கிஷோர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் கிஷோர் நேற்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு மொபட்டில் சுற்றுலா வந்தார். அங்கு அவர் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு பின்னர் மொபட்டில் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

இதையடுத்து அவர் சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் நுழைவுவாயில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

விசாரணை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சேந்தமங்கலம் போலீசார் கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மாதி கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com