வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலியானார்.

காவலாளி

வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல ராசிபுரம்- ஆட்டையாம்பட்டி சாலையில் மின்னக்கல் பிரிவு பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்லப்பன் மீது மோதியது.

வாலிபர் கைது

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 வாகன மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பன் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெண்ணந்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆட்டையாம்பட்டி ராஜபாளையம் கருப்பனார் கோவில் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் ஹரிஹரன் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com