மத்தளபள்ளம் தடுப்பணையில் தவறி விழுந்து வியாபாரி சாவு

மத்தளபள்ளம் தடுப்பணையில் தவறி விழுந்து வியாபாரி சாவு
Published on

பென்னாகரம்:

ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 75). வளையல் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வளையல் வியாபாரம் செய்ய சென்றார். இந்த நிலையில் மத்தளபள்ளம் தடுப்பணை பகுதியில் சின்னசாமி இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சின்னசாமியின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சின்னசாமியின் மகன் பூபால் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வியாபாரத்துக்கு சென்ற சின்னசாமி மத்தளபள்ளம் தடுப்பணையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com