டெல்லியில் பணியின்போது இறந்தஎல்லை பாதுகாப்பு படை வீரர் உடலுக்கு அஞ்சலி

டெல்லியில் பணியின்போது இறந்தஎல்லை பாதுகாப்பு படை வீரர் உடலுக்கு அஞ்சலி
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி ஊராட்சி சங்கனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் புதுடெல்லி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியின்போது ராஜ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் நேற்று மதியம் சொந்த ஊரான சங்கனம்பட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தாசில்தார் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் மணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செலுத்தினர்.

ராஜ்குமாருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com