பாம்பு கடித்து தொழிலாளி சாவு

பாம்பு கடித்து தொழிலாளி சாவு
Published on

பரமத்திவேலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிசிவம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சக்திவேல் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டினார். அப்போது தோட்டத்தில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com