நாமக்கல் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

நாமக்கல் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
Published on

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50).விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். செல்லப்பம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இங்கு சிகிச்சை பலன்இன்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com