ஏரியூர் அருகேவனப்பகுதி மரத்தில் முதியவர் பிணம்போலீசார் விசாரணை

ஏரியூர் அருகேவனப்பகுதி மரத்தில் முதியவர் பிணம்போலீசார் விசாரணை
Published on

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள தின்னபெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 72). இவருடைய மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருப்பண்ணனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை கருப்பண்ணன் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரை தேடி சென்றபோது மேட்டூரான் கொட்டாய் அணைக்கரை அருகே வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கருப்பண்ணன் துண்டால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். தகவல் அறிந்து சென்ற ஏரியூர் போலீசார் கருப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com