கோட்டப்பட்டி அருகேவிளக்கு ஏற்றியபோது தீக்காயமடைந்த சிறுமி சாவு

கோட்டப்பட்டி அருகேவிளக்கு ஏற்றியபோது தீக்காயமடைந்த சிறுமி சாவு
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி, தொழிலாளி. இவருடைய மகள் மோனிகா (வயது 10). மோனிகா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் விளக்கு ஏற்றிய போது உடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி காயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சிறுமி மோனிகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com