பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா கே.மோட்டூரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் அமர்ந்திருந்தபோது கால்வாயில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யமூர்த்தி இறந்தார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com